E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4093/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

    1. 4093/ ’13

      கௌரவ அனுர திஸாநாயக்க,— தனியார் போக்குவரத்துச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      அரை சொகுசு பயணிகள் போக்குவரத்துச் சேவைக்கான கட்டணங்கள் கணிக்கப்படும் அடிப்படை யாதென்பதையும்;

                 (ii)     அரை சொகுசு பயணிகள் போக்குவரத்துச் சேவைக்கென வழங்கப்பட்டுள்ள நியமங்கள் யாவை என்பதையும்;

      (iii) குறித்த நியமங்களுக்கு அமைவாக இல்லாத பேரூந்துகள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iv) கடந்த 03 ஆண்டு காலப்பகுதியில் அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள பேரூந்துகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) அரை சொகுசு பேரூந்துகளை ஒத்த வேறு பேரூந்துகள் சாதாரண கட்டணத்தின் கீழ் சேவையில் ஈடுபடுவதை அவர் அறிவாரா என்பதையும்;

      (ii) அரை சொகுசு பேரூந்துகளினூடாக பயணிகளிடமிருந்து மேலதிக கட்டணம் அறவிடப்படுகிறதா என்பதையும்;

      (iii) அரை சொகுசு பேரூந்து சேவையை நிறுத்துவது தொடர்பாக அமைச்சர் தெரிவித்துள்ள கூற்றுக்குச் சமாந்தரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iv) அதன் பெறுபேறுகள் யாவை என்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-04

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

தனியார் போக்குவரத்துச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-03-04

பதில் அளித்தார்

கௌரவ சீ.பீ. ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks