பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4095/ ’13
கெளரவ அனுர திஸாநாயக்க,— தொழில்நுட்ப, ஆராய்ச்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா வகைகளில் உடலுக்கு பாதகமான ஆக்கக்கூறுகள் உள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், பால்மா வகைகளில் உள்ளடங்கியுள்ள உடலுக்கு பாதகமான ஆக்கக்கூறுகள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி ஆக்கக்கூறுகளை கொண்டுள்ள பால்மா வகைகள் யாவையென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) பால்மா வகைகளில் அடங்கியுள்ள பாதகமான ஆக்கக்கூறுகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்ட நிறுவனம் யாதென்பதையும்;
(ii) மேற்குறிப்பிட்ட விடயத்துக்கேற்புடைய ஆராய்ச்சி நடவடிக்கைகள் வெளிநாட்டு ஆய்வு கூடங்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட ஆராய்ச்சி அறிக்கைகளில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் யாவையென்பதையும்;
(iv) பாதகமான ஆக்கக்கூறுகளை கொண்டுள்ள பால்மா வகைகள் மற்றும் குறித்த பால்மா வகைகளின் இறக்குமதியாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-01-24
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
தொழில்நுட்பவியல், ஆராய்ச்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-03-19
பதில் அளித்தார்
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks