பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4098/ ’13
கெளரவ கயந்த கருணாதிலக்க,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற வானிலை எதிர்வுகூறல்களின் துல்லியத்தன்மை தொடர்பாக பிரச்சினைகள் காணப்படுகின்றன என்பதையும்;
(ii) குறைந்தபட்சம் வெளிநாடுகளினால் அஞ்சல் செய்யப்படுகின்ற இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சீரற்ற வானிலை தொடர்பான எதிர்வுகூறல்களையேனும் ஆராய்ந்து பார்த்து, அது தொடர்பாக முன்கூட்டியே மக்களுக்கு அறிவிப்பதற்கு மேற்படி திணைக்களம் பல தடவைகள் தவறியுள்ளது என்பதையும்;
(iii) சரியான வானிலை எதிர்வுகூறல்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படாத காரணத்தினால் நாட்டு மக்களுக்கு குறிப்பாக மீனவர் சமூகத்துக்கு பாரதூரமான உயிர் மற்றும் சொத்துச் சேதங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதென்பதையும்;
(iv) சரியாகவும் உரிய நேரத்திலும் எதிர்வுகூறல்களை வெளியிடுவதற்கு, மேற்படி திணைக்களத்துக்கு சொந்தமான முன் எச்சரிக்கை முறைமையை புதிய தொழில்நுட்பத்துக்கமைய உடனடியாக நவீனமயமாக்க வேண்டிய தேவைப்பாடு நிலவுகின்றதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) வளிமண்டலவியல் திணைக்களத்தில் நீண்ட காலமாக நிலவும் வானிலை விஞ்ஞானி பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) மேற்படி வெற்றிடங்கள் அனைத்தும் திட்டவட்டமாக நிரப்பப்படும் திகதி யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-11-05
கேட்டவர்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
அமைச்சு
அனர்த்த முகாமைத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks