E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4252/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

    1. 4252/ ’13

      கௌரவ அஜித் பி. பெரேரா,— பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     1988.06.07 ஆம் திகதிய 509/7 ஆம் இலக்க இலங்கை நிர்வாக சேவைப் பிரமாணங்களின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்க்கப்படுகின்ற உத்தியோகத்தர்கள் முதலாவது வினைத்திறன் காண் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி சேவைப் பிரமாணத்தில் இது சம்பந்தமாக குறிப்பிடப்பட்டுள்ள பிரிவு யாதென்பதையும்;

      (iii) அவ்வாறனதொரு பிரிவு இல்லையெனில், மேற்படி வினைத்திறன்காண் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனையை நியமனக் கடிதங்களில் சேர்ப்பதற்கு மேற்படி சேவைப் பிரமாணத்தின் 28ஆம் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      (iv) சேவைப் பிரமாணத்தில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்படாதிருப்பின் மற்றும் 28 ஆம் பிரிவுக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லையாயின் மேலே கூறியவாறு ஆட்சேர்க்கப்பட்ட உத்தியோகத்தர்களின் நியமனக் கடிதங்களில் (அ) (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனை சேர்க்கப்பட்ட அடிப்படை யாதென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு சம்பந்தப்பட்ட நியமனக் கடிதங்களில் மேற்படி சேவைப் பிரமாணத்திற்கு ஒவ்வாதவாறு நிபந்தனைகள் சேர்க்கப்பட்டமையால் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ள உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம் வழங்குவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், இந்நிவாரணம் யாதென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-28

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-02-18

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks