பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4308/ ’13
கௌரவ இரான் விக்கிரமரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அறிவுடைச் சமூகத்திற்கான கல்விச் செயற்றிட்டத்தின் (EKSP) கீழ் பாடசாலைகளுக்கு கணினிகள் வழங்கப்பட்டனவா என்பதையும்;
(ii) அவ்வாறெனின், மேற்கூறிய கருத்திட்டத்தின் கீழ் கணினிகள் வழங்கப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கையையும்
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஆ) 2012 டிசம்பரில் உள்ளவாறு,
(i) EKSP கருத்திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட கணினிகளின் எண்ணிக்கையையும்;
(ii) கணினி கொள்வனவுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட வழங்குனர்களின் பெயர்களையும்;
(iii) வழங்கப்பட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட கணினிகளின் எண்ணிக்கையையும்;
(iv) வழங்கப்பட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்தின் கீழ் வழங்குனருக்கு/வழங்குனர்களுக்கு செலுத்தப்பட்டுள்ள விலையையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) EKSP கருத்திட்டத்திற்கான கணினி வழங்குநர்களைத் தெரிவுசெய்வதற்கு பொறுப்பாயுள்ள அமைப்பையும்;
(ii) தெரிவுச் செயன்முறையில் வழங்குநர்களை மதிப்பிடுவதற்கு மேற்கொள்ளப்படும் முறைமையையும்;
(iii) தெரிவுச் செயன்முறையில் விதித்துரைக்கப்பட்ட தகவுதிறன்களை தெரிவுசெய்யப்பட்ட வழங்குனர்கள் கொண்டிருந்தார்களா என்பதையும்
அவர் கூறுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-12-20
கேட்டவர்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-20
பதில் அளித்தார்
கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks