பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4309/ ’13
கௌரவ வசந்த அலுவிஹாரே,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தளை மாவட்டத்தில் பல்லேபொல பிரதேச செயலாளர் பிரிவின் பல்தெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள பெலெக்ஸ்டோன் தோட்டம் எனப்படும் பாபர் தோட்டம் என்ற காணி, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் சுவீகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனின், மேற்படி சுவீகரிப்பு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு மற்றும் இதற்கு ஏற்புடையதாக்கிக்கொள்ளப்பட்ட சட்ட ஏற்பாடுகள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி காணிக்குரிய மொத்த நிலப்பரப்பு எவ்வளவென்பதையும்;
(iv) இதன் பூர்வீக உரிமையாளர் யாவரென்பதையும்;
(v) மேற்படி காணியில் தற்போது பயிரிடப்பட்டுள்ள விவசாயப் பயிர் வகைகள் யாவை என்பதையும்;
(vi) வருடாந்தம் இதிலிருந்து கிடைக்கும் வருமானம் எவ்வளவென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) தொண்டு நிறுவனம் என்ற பெயரில் இயங்கும் நிறுவமொன்றினால் தற்போது மேற்படி காணி சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகின்றதென்பதையும்;
(ii) நாடுபூராவும் மேற்படி நிறுவனத்திற்கு சொந்தமான காணிகள் உள்ளன என்பதையும்;
(iii) இது ஒரு தொண்டு நிறுவனமல்ல வணிக ரீதியிலானதொரு நிறுவனமாகும் என்பது காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மேற்கொண்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டதென்பதையும்
அவர் அறிவாரா?
(இ) நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக முறைசார்ந்த விசாரணையொன்றை மேற்கொண்டு பெலெக்ஸ்டோன் தோட்டத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-03-18
கேட்டவர்
கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-03-18
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks