E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4332/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

    1. 4332/ ’13

      கௌரவ (திருமதி) அனோமா கமகே,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      இந்நாட்டில் இயங்கி வருகின்ற கல்வியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு பாடத்திற்கும் அமைய தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      (ii) 2013 ஆம் ஆண்டில் ஒவ்வொரு கல்வியியல் கல்லூரியிலும் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) கல்வியியல் கல்லூரிகளில் சேவையாற்றுகின்ற பீடாதிபதிகளின் பெயர்கள் மற்றும் தகைமைகள் யாவை என்பதையும்;

      (ii) கல்வியியல் கல்லூரி பீடாதிபதிப் பதவியை வகிப்பதற்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச தகைமைகள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படி கல்வியியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் பற்றாக்குறை நிலவுகின்றதா என்பதையும்;

      (iv) ஆமெனில், விரிவுரையாளர் பற்றாக்குறை காணப்படும் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் பாடங்கள் யாவை என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-05-23

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-07-10

பதில் அளித்தார்

கௌரவ மொஹான் லால் கிரேரு, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks