E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4334/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

    1. 4334/’13

      கௌரவ (திருமதி) அனோமா கமகே, - கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      தற்போது தேசிய பாடசாலைகளில் அதிபர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றனவா என்பதையும்;

                 (ii)     ஆமெனில், அதிபர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்ற மேற்படி பாடசாலைகள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்காக அண்மையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டனவா என்பதையும்;

      (iv) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;

      (v) மேற்படி விண்ணப்பங்கள் கோரப்பட்ட பின்னர் தெரிவு செய்யப்பட்ட அதிபர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) தேசிய பாடசாலையொன்றில் அதிபர் பதவியை வகிப்பதற்கு காணப்பட வேண்டிய கல்வித் தகைமைகள் யாவை என்பதையும்;

      (ii) தற்போது சேவையாற்றுகின்ற தேசிய பாடசாலை அதிபர்கள் மேற்படி தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ளார்களா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-06-17

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-06-17

பதில் அளித்தார்

கௌரவ மொஹான் லால் கிரேரு, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks