பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4428/ ’13
கௌரவ கயந்த கருணாதிலக்க,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2009-09-24 ஆம் திகதிய 1620/22 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானப் பத்திரிகையின் பிரகாரம் அரசாங்க நூலகர் சேவைப் பிரமாணங்களுக்கு அமைவாக இடைக்கால ஏற்பாடுகளின் கீழ் சேவையிலீடுபட்டுள்ள நூலகர்களுக்கு முற்திகதியிட்டு குறித்த வகுப்பிற்கு வழங்கப்பட வேண்டிய பதவியுயர்கள் இதுவரையில் உரிய முறையில் வழங்கப்படவில்லையென்பதையும்;
(ii) தற்போது அரசாங்க நூலகர் சேவையின் ஆட்சேர்ப்பு வகுப்பான III ஆம் வகுப்பில் பல வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்பதையும்;
(iii) மேலே குறிப்பிடப்பட்ட சேவைப் பிரமாணங்களில் இனங்காணப்பட்டுள்ள ஊழியர் எண்ணிக்கையில் 70% கும் அதிகமானவை இற்றைவரை வெற்றிடங்களாக காணப்படுகின்றன என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) 1981 ஆம் ஆண்டு தொடக்கம் மேலே குறிப்பிடப்பட்ட நூலகர் சேவையின் உயர்/விஷேட வகுப்பின் சம்பள அளவுத் திட்டமானது நாடளாவிய சேவைகளின் II/II வகுப்பின் சம்பள அளவுத் திட்டத்திலும் உயர்வாக காணப்பட்டதென்பதையும்;
(ii) 06/2006 ஆம் இலக்க பொது நிருவாக சுற்றறிக்கையின் மூலம் நூலகர் சேவையின் விஷேட வகுப்பானது மேலே குறிப்பிடப்பட்ட நாடளாவிய சேவை தாபிக்கப்பட்ட சம்பள அளவுத் திட்டத்திற்கு மிகவும் கீழான MN – 07 சம்பள அளவுத் திட்டத்தில் தாபிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
(iii) இதன் மூலம் நூலகர் விஷேட வகுப்பிற்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதென்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) (i) மேற்படி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) இந் நடவடிக்கைகள் எத்திகதியிலிருந்து அமுலாக்கப்படுமென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-04-25
கேட்டவர்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
அமைச்சு
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-06-05
பதில் அளித்தார்
கௌரவ சரத் அமுணுகம, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks