பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4485/ ’13
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) பலாங்கொடை கல்தோட்ட மாவட்ட வைத்தியசாலை தற்போது சிதைவடைந்து மூடப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) கல்தோட்ட மாவட்ட வைத்தியசாலையிலிருந்து மருத்துவ வசதிகளை பெறுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) மேற்படி வைத்தியசாலையில் பணியாட்டொகுதியில் கடும் பற்றாக்குறை நிலவுகின்றதென்பதையும், ஒழுங்காக சேவை வழங்குவதற்கு போதியளவு கட்டட வசதிகள் இல்லை என்பதையும் அவர் ஏற்றுகொள்வாரா;
(ii) மேற்படி வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற மருத்துவர்கள், தாதிமார்கள் மற்றும் ஏனைய ஊழியர்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாது;
(iii) மேற்படி வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட வேண்டிய மற்றும் திருத்தப்பட வேண்டிய கட்டடங்களின் எண்ணிக்கை யாது;
(iv) பிரதேசத்தின் மக்களுக்கு வினைத்திறன்மிக்க சேவையை வழங்குவதற்காக மேற்படி வைத்தியசாலைக்குத் தேவையான பணியாட்டொகுதியினரையும் ஏனைய அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-08-20
கேட்டவர்
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks