பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4508/ ’13
கௌரவ அப்துல் ஹலீம்,— நீர்ப்பாசன, நீர் வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த பதினைந்து வருடங்களுக்கு அண்மித்த காலத்தில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் மழை காரணமாக அக்குரண நகரம் நீரில் மூழ்கியதென்பதையும்;
(ii) நகரம் நீரில் மூழ்கியமை காரணமாக வர்த்தக நிலையங்களுக்கும் நகரவாசிகளுக்கும் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதென்பதையும்;
(iii) அக்குரண நகரம் நீரில் மூழ்கிய சந்தர்ப்பங்களில் யாழ்ப்பாணம் – கண்டி வீதியை (A9) பயன்படுத்த இயலாமல் போகின்றதென்பதையும்;
(iv) 1997 ஆம் ஆண்டில் அக்குரண நகரம் நீரில் மூழ்கிய வேளையில் உத்தியோகத்தர்களின் அறிவுரைகளுக்கிணங்க நகரத்தினூடாக செல்கின்ற கால்வாய்க்கு இடையூறான விதத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டடங்களின் பகுதிகள் அகற்றப்பட்டனவென்பதையும்;
(v) அக்குரண பெரிய பள்ளிவாசல் மற்றும் பகுதிவாழ் மக்களின் உதவியுடன் கிட்டத்தட்ட ரூபா 5 மில்லியன் செலவில் மேற்படி கால்வாயின் வண்டல் படிவுகள் இரண்டு தடவைகள் அகற்றப்பட்டனவென்பதையும்;
(vi) அத்துடன் கால்வாய்க்கு பக்கத்தில் இருந்த அனைத்து மரஆலைகளும் அகற்றப்பட்டனவென்பதையும்;
(vii) ஆயினும், 2013 ஒக்டோபர் மாதம் 31 அம் திகதி பெய்த மழையினால் அக்குரண நகரம் மீண்டும் நீரில் மூழ்கியதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) அக்குரண நகரம் நீரில் மூழ்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மத்திய அமைச்சின் தலைமையில் ஏனைய அமைச்சுக்கள், நிறுவனங்களையும் இணைத்துக்கொண்டு ஏதேனும் ஆய்வினைச்செய்து நிலைபேறான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-06-19
கேட்டவர்
கௌரவ அப்துல் ஹலீம், பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-06-19
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks