பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4558/ ’13
கௌரவ ரஞ்சன் ராமநாயக்க,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) வீடொன்று இல்லாத, குறைந்த வருமானம் பெறும், வெளிநாட்டில் தொழில்புரிகின்ற ஊழியர்களுக்காக “ரட்டவிருவோ கடன் திட்டம்” என்ற பெயரில் வீடமைப்புக் கடன் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்ட வீடமைப்புக் கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட திகதி யாது;
(ii) மேற்படி கடனை வழங்குகின்ற வங்கி யாது;
(iii) நாட்டினுள் இயங்கி வருகின்ற அந்த ஒவ்வொரு வங்கிக் கிளைகளினதும் எண்ணிக்கை எவ்வளவு;
(iv) மேற்படி கடன் திட்டம் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர் வூட்டுவதற்கு மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏனைய நிருவாக நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள செலவு எவ்வளவு
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கடன் தொகையொன்றை பெறுவதற்கான நிபந்தனைகள் மற்றும் தகைமைகள் யாவை;
(ii) ஒருவருக்கு வழங்கப்படும் கூடியபட்ச கடன் தொகை எவ்வளவு;
(iii) மேற்படி கடன் தொகைக்காக அறவிடப்படும் வட்டி வீதம் எவ்வளவு;
(iv) இதுவரை மேற்படி கடன் தொகைக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் கடன் வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-22
கேட்டவர்
கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks