E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4567/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.

    1. 4567/ ’13

      கௌரவ துனேஷ் கங்கந்த,— இளைஞர் அலுவல்கள், திறன் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      மஹிந்த சிந்தனை எதிர்காலத்திற்கான தொலை நோக்கில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 18 வயது தொடக்கம் 22 வயது வரையான ஒவ்வொருவருக்கும் தமது விருப்பின் பிரகாரம் தேவைப்படுகின்ற மூன்றாம்நிலைக் கல்வியை அல்லது பயிற்சியை பெற்றுக்கொள்வதற்காக ரூபா இரண்டு இலட்சம் வரையான பணத் தொகையொன்றை ஒதுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், இற்றைவரை இந்த வசதியைப் பெற்றுக்கொண்டுள்ள இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) மேற்படி நிதி வசதியைப் பெறுவதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை யாதென்பதையும்;

      (iv) வழங்கப்படும் பணத் தொகை மீள அறவிடப்படுமா என்பதையும்;

      (v) அப் பணத்தொகை மீள அறவிடப்படுமெனின், மேற்படி பணத் தொகையைப் பயன்படுத்தி பெறப்படுகின்ற கல்வி அல்லது பயிற்சி முடிவடைந்து எவ்வளவு காலத்தின் பின்னர் அது அறவிடப்படும் என்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) இற்றைவரை மேற்படி வசதியை வழங்குவதற்கான வேலைத் திட்டமொன்று தயாரிக்கப்படவில்லையெனின், மஹிந்த சிந்தனை எதிர்காலத்திற்கான தொலை நோக்கின் மூலம் மேற்படி இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மேற்படி வாக்குறுதியை யதார்த்தமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-06-05

கேட்டவர்

கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.

அமைச்சு

இளைஞர் அலுவல்கள், திறன் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-07-22

பதில் அளித்தார்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks