E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4569/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.

    1. 4569/ ’13

      கெளரவ துனேஷ் கன்கந்த,—  கல்வி அமைச்சரைக்  கேட்பதற்கு,—

      (அ)    (i)          தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள் என அழைக்கப்படுகின்ற பாடசாலைகளை அவ்வாறு வகைப்படுத்துவதற்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்ட பிரமாணங்கள் யாவை என்பதையும்;

                 (ii)    தற்போது காணப்படுகின்ற தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கையும் மேற்படி பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கையும் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (iii) 2013 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட முன்மொழிவுகளில் உள்ளடங்கியிருந்த மேலே குறிப்பிடப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஆண்டின் நடுப்பகுதியில் மேலதிக பாடசாலை சீருடைத் துணி, இலவசமாக ஒரு சோடி பாதணிகள் அத்துடன் தானியங்கள், முட்டை மற்றும் பாலுடன் கூடிய ஒரு வேளை உணவு வழங்கப்படுமென்ற முன்மொழிவுகளுக்கமைய மேற்படி ஒவ்வொரு வசதியையும் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (iv) இதற்காக அரசாங்கம் வருடாந்தம் செலவிடும் பணத் தொகை எவ்வளவென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-06-06

கேட்டவர்

கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.

அமைச்சு

கல்விச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks