பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4605/ ’13
கெளரவ ஜோன் அமரதுங்க,— காணி, காணி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1950ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க காணி கொள்ளல் சட்டத்தின் 63(1) முதல் 63(4) வரையான பிரிவுகள் 2009 ஏப்ரல் 07ஆம் திகதிய 1596/12ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளினால் மீறப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) மேலே சொல்லப்பட்ட ஒழுங்குவிதிகள் பிணிப்பை அல்லது ஏதேனும் வலுவைக்கொண்டுள்ளனவா என்பதையும்;
(iii) சொல்லப்பட்ட ஒழுங்கு விதிகள் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டு சொல்லப்பட்ட சட்டத்தின் பிரிவு 63(3) இன் பிரகாரம் ஆக்கப்பட்டதா என்பதையும்;
(iv) அவை சட்டவிரோதமானவையும் செல்லுபடியற்றவையுமா என்பதையும்
அவர் கூறுவாரா?
(ஆ) (i) (அ) (i)இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் காணி கொள்ளல் சட்டத்தின் பிரிவு 63(3)இனால் ஆணையிடப்பட்ட பாராளுமன்ற அங்கீகாரத்தைப் புறக்கணித்து சட்டவிரோதமாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்பதையும்;
(ii) பொது நோக்கங்களுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான சந்தைப் பெறுமதியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை மேலே சொல்லப்பட்ட ஒழுங்குவிதிகளினால் இழக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் உள்ளதென்பதையும்
அவர் அறிவாரா?
(இ) 2009 ஏப்ரல் 7ஆம் திகதிய 1596/’12ஆம் இலக்க வர்த்தமானி மூலம் விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை நீக்கி புதிதாக ஒரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமா என்பதையும் அவர் கூறுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-03-04
கேட்டவர்
கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.
அமைச்சு
காணி, காணி அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-03-04
பதில் அளித்தார்
கௌரவ சிறிபால கமலத், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks