பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4630/ ’13
கௌரவ பி. ஹரிசன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2014 ஆம் ஆண்டில் இரண்டு இலட்சம் மெட்றிக் தொன் அரிசியை ஏற்றுமதி செய்வதற்காக 2012 வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் ரூபா 200 மில்லியன் ஒதுக்கப்பட்டதென்பதையும்;
(ii) இதன் பொருட்டு தெற்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வட மாகாணங்களில் 4 அரிசி ஏற்றுமதி வலயங்களைத் தாபிக்க முன்மொழியப்பட்டதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்ட அரிசி ஏற்றுமதி வலயங்களைச் சார்ந்ததாக அரசாங்கத்தினாலும் தனியார் துறையினாலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள அரிசி ஆலைகளின் எண்ணிக்கை யாது;
(ii) இவற்றில் வரிச் சலுகையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள அரிசி ஆலைகளின் எண்ணிக்கை யாது
என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) மேலே குறிப்பிடப்பட்ட அரிசி ஏற்றுமதி வலயங்களுக்குரிய பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் அதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள கிராமங்கள் ஒவ்வொரு வலயத்திற்கிணங்க தனித்தனியாக யாவை;
(ii) இன்றளவில் மேற்படி ஒவ்வொரு வலயத்திலிருலிருந்தும் ஏற்றுமதிக்காக கிடைக்கின்ற அரிசியின் அளவு யாது;
(iii) மேற்படி (ஆ) (i) இல் குறிப்பிடப்பட்ட மேற்படி அரிசி ஆலைகள் அமைந்துள்ள இடங்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை
என்பதை அவர் சபா பீடத்தில் சமர்ப்பிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-24
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-07-24
பதில் அளித்தார்
கௌரவ கெளரவ வை.ஜீ. பத்மசிரி, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks