பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4638/ ’13
கெளரவ பி. ஹரிசன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் சேதன உரம் உற்பத்தி செய்வதற்காக 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதில் ரூபா 300 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி பணத் தொகையை செலவிட்டு ஆரம்பிக்கப்பட்ட சேதன உரம் உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி உற்பத்தி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் யாவையென்பதையும்;
(ii) அந்தந்த மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளை தனித்தனியாகவும்
அவர் சபாபீடத்திற்குச் சமர்ப்பிப்பாரா?
(இ) மேற்படி (அ)(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள பணத்திலிருந்து தனியார் துறையைச் சேர்ந்தவர்களுக்கு சேதன உரம் உற்பத்தி செய்வதற்காக நிதியுதவி மற்றும் உபகரணங்கள் வழங்கப்படுதலும் மற்றும், கருத்தரங்குகளும் விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களும் நடத்தப்பட்டிருப்பின், அப்பயனாளிகளின் பெயர்கள், முகவரிகள் மற்றும் அதற்காக செலவிடப்பட்டுள்ள பணத் தொகை வெவ்வேறாக யாவையென்பதை அவர் சபா பீடத்திற்குச் சமர்ப்பிப்பாரா?
(ஈ) (i) மேற்படி பணம் செலவிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட சேதன உரம் உற்பத்திச் செயன்முறையின் ஊடாக வருடாந்தம் சந்தைக்கு எத்தனை கிலோகிறாம் உரம் விநியோகிக்கப்படுகின்றதென்பதையும்;
(ii) வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் மூலம் ரூபா 400 விலையில் சேதன உரம் கொள்வனவு செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய, தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ள உரத்தின் அளவு யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-09-25
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks