பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4640/ ’13
கௌரவ பி. ஹரிசன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள கம்பனிகளின் எண்ணிக்கை எவ்வளவு;
(ii) மேற்படி கம்பனிகளில் பாரியளவில் விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்கின்ற நிறுவனங்கள் யாவை;
(iii) தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்தல் தடைசெய்யப்பட்டுள்ள விவசாய இரசாயனனப் பொருட்கள் வகைகளின் எண்ணிக்கை எவ்வளவு
என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி அ(i) இல் குறிப்பிட்ட கம்பனிகளின் பெயர்கள், முகவரிகள் மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள திகதிகள்;
(ii) தடைசெய்யப்படும்வரை மேற்படி விவசாய இரசாயனப் பொருட்களை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்த கம்பனிகளின் பெயர்கள்;
(iii) தடைசெய்யப்பட்ட விவசாய இரசாயனப் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ததன் காரணமாக கரைநிரல் படுத்தப்பட்டுள்ள (Black list) நிறுவனங்களின் பெயர்கள்
என்பவற்றை அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?
(இ) (i) கரைநிரல்படுத்தலுக்கு உள்ளாகிய நிறுவனங்களின் பணிப்பாளர்கள் வேறு பெயர்களில் நிறுவனங்களை பதிவுசெய்துள்ளார்கள் என்பதை அறிவாரா;
(ii) ஆமெனில், இவர்கள் தொடர்பாக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் யாவை
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-10-21
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks