பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4666/ ’13
கௌரவ அகில விராஜ் காரியவசம்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்கின்றபோது மருந்துகளை தெரிவு செய்கின்ற நடைமுறையொன்று உள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அது யாது என்பதையும்;
(iii) மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக தற்போது சுகாதார அமைச்சின் கீழ் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி நிறுவனங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்படுகின்ற மருந்துகள் இலங்கையில் தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனவா என்பதையும்;
(v) ஆமெனில், அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற மருந்து வகைகள் காலாவதியாகும் திகதியைத் தீர்மானிக்கும் பொருட்டு பின்பற்றப்படுகின்ற நடைமுறை யாது என்பதையும்;
(ii) மருந்து வகைகளை இறக்குமதி செய்தல் அவற்றின் உற்பத்தித் திகதியிலிருந்து எவ்வளவு காலப்பகுதியினுள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும்;
(iii) கடந்த காலங்கள் முழுவதும் அரசாங்க வைத்தியசாலைகளிலிருந்து காலாவதியான மருந்துகள் கண்டெடுக்கப்பட்டமை அறிக்கையிடப்பட்டதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iv) கடந்த ஆண்டில், காலாவதியானதன் காரணமாக அரசாங்க வைத்தியசாலைகளிலிருந்து அகற்றப்பட்ட மருந்துகளின் அளவு மற்றும் அவற்றின் பெறுமதி எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-06-05
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-06-05
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks