பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4798/ ’14
கௌரவ கயந்த கருணாதிலக்க,— வலு, சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் அது செயலிழந்த தடவைகளின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் செயலிழந்து காணப்பட்ட காலகட்டம் வெவ்வேறாக யாது;
(ii) இதுவரை அது செயலிழந்து காணப்பட்ட சந்தர்ப்பங்களில் அதனை திருத்துவதற்காக செலவான மொத்தப் பணத் தொகை எவ்வளவு;
(iii) மேற்படி திருத்தத்திற்காக செலவான பணத் தொகை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கமைய வெவ்வேறாக எவ்வளவு;
(iv) மேற்படி செயலிழப்பானது ஏற்புடைய உபகரணங்களின் உத்தரவாத காலத்தினுள் இடம்பெற்றிருப்பின் மேலே குறிப்பிட்டவாறு பணம் செலவிடப்பட்டமைக்கான காரணங்கள் யாவை
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக மேற்படி காலகட்டங்களினுள் வேறு மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து தேசிய மின்சார முறைமைக்கு மின்சாரத்தை பெறுவதற்காக செலவிடப்பட்ட மேலதிகப் பணத் தொகை எவ்வளவு;
(ii) மேற்படி மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழப்பு காரணமாக செலவான மேலதிகப் பணத் தொகையை கூட்டுகின்றபோது ஓர் அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவு
என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-11
கேட்டவர்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks