பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4843/ ’14
கௌரவ ஆர். எம். ரஞ்ஜித் மத்தும பண்டார,— நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மொனராகலை மாவட்டத்தில் படல்கும்புர, மெதகம, மொனராகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு எல்லையாக ஓடுகின்ற “கும்புக்கன் ஓயா”வுக்கு குறுக்காக “நக்கல நீர்த்தேக்கம்” என்ற பெயரில் நீர்ப்பாசனக் கருத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) மேற்படி நீர்ப்பாசனக் கருத்திட்டத்திற்கு நிதி முதலீடு செய்யும் நிறுவனம் யாது என்பதையும்;
(iii) இந்த நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள எதிர்பார்க்கின்ற நோக்கங்கள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) நக்கல நீர்த்தேக்கத்தை நிர்மாணிக்கும் போது அதற்கு உட்படுகின்ற மொத்தக் காணிகளின் அளவு எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி கருத்திட்டத்திற்கு ஏற்புடையதாக பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக ஒதுக்கப்படுகின்ற பிரதேசத்திலிருந்து அகற்றப்படுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) மேற்படி கருத்திட்டத்திற்காக சுவீகரிக்கப்படுகின்ற சகல காணிகளுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கு நட்டஈடு செலுத்த நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-22
கேட்டவர்
கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-07-22
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks