பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4869/ ’14
கௌரவ அஜித் மான்னப்பெரும,— நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நிலக்கீழ் நீர் அமிலத் தன்மைக்கு உள்ளாகியுள்ளதால் தமது நீர்த் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் உள்ள ரத்துபஸ்வல மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் மக்களுக்கு குழாய் நீர் வழங்கப்படும் திகதி யாது;
(ii) இதற்காக நீர் பாவனையாளர்களிடமிருந்து ஆரம்பத் தொகையொன்று அறவிடப்படுமா;
(iii) ஆமெனில் அப் பணத்தொகை எவ்வளவு;
(iv) தற்போது நீர்க் குழாய்கள் இடப்பட்டுள்ள வீதிகளுக்கு மேலதிகமாக ஏனைய இடை வீதிகளிலுள்ள வீடுகளுக்கு நீர் வழங்குகின்றபோது ஆரம்பத் தொகைக்கு மேலதிகமாக வேறு பணத்தொகை அறவிடப்படுமா
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) ரத்துபஸ்வல மற்றும் சுற்றுப்புறப் பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு குழாய் நீர் வழங்கும் திட்டம் பூர்த்தியடையும்வரை அந்த மக்களுக்குத் தேவையான குடிநீரை தொடர்ச்சியாக பவுசர்கள் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-22
கேட்டவர்
கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.
அமைச்சு
நீர் வழங்கல், வடிகாலமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-07-22
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks