E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4908/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.

    1. 4908/ ’14

      கௌரவ ஆர். எம் ரஞ்சித் மத்துமபண்டார,— காணி, காணி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     மொனறாகல, எத்திமலேவெவ, வைத்தியசாலைக்கு எதிரில், இலக்கம் 127/1இல் வசிக்கும் திரு. டபிள்யு. எம். வீரசிங்ஹ நிலஅளவைத் திணைக்களத்தில் நிலஅளவைக் கள உதவியாளராக (டபிள்யுஈ/டபிள்யு/158) சேவையாற்றினாரென்பதையும்;

      (ii) பொலநறுவை,  புதிய நகரத்தில் நிலஅளவையாளர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் நிலஅளவையாளர் தலைமை அதிபதியின் சீஜீ/1/1/1/வீ/460 இலக்க 2004.08.20 திகதிய கடிதம் மூலமாக அவரது தொழில் இடைநிறுத்தப்பட்டுள்ளதென்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) திரு. வீரசிங்ஹவின் தொழில் இடைநிறுத்தத்திற்கு ஏதுவாக அமைந்த பதுளை மேல்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட 91/2003 ஆம் இலக்க வழக்கு சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் 2012.11.02 ஆந் திகதி இவர் குற்றமற்றவரென விடுதலை செய்யப்பட்டுள்ளமையால்  தொழில் இடைநிறுத்தப்பட்ட நாளில் இருந்து இவருக்கு உரித்தான நிலுவைச் சம்பளத்தை வழங்குவதற்கும் இவருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

       (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-08-06

கேட்டவர்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.

அமைச்சு

காணி, காணி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks