பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4942/ ’14
கௌரவ (திருமதி) அனோமா கமகே,— பாரம்பரிய கைத்தொழில்கள், சிறு தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் கித்துல் செய்கை பரவலாக காணப்படும் பிரதேசங்கள் யாவை என்பதையும்;
(ii) கித்துல் செய்கையில் ஈடுகின்ற மற்றும் கித்துல் சார்ந்த உற்பத்திகள் மூலமாக வருமானம் பெறுகின்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) கித்துல் செய்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் அச்செய்கையினை பெருந்தோட்டங்கள்/தோட்டங்கள் மட்டத்தில் மேற்கொள்கின்றாரா என்பதையும்;
(iv) கித்துல் உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(v) கித்துல் உற்பத்திகளை வெளிநாடுகளில் பிரல்யப்படுத்த நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(vi) ஆமெனின், அந்த நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) கித்துல் சார்ந்த உற்பத்தி வகைகள் யாவை என்பதையும்;
(ii) இவற்றின் வருடாந்த உற்பத்திகள் பற்றிய மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனின், இவற்றின் அளவுகள் யாவை என்பதையும்;
(iv) கித்துல் செய்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய கைத்தொழில்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச துறை ஊழியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பதவிக்கு ஏற்ப தனித்தனியே எவ்வளவென்பதையும்
அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?
(இ) (i) மேற்படி ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக அரசாங்கம் வருடாந்தம் செலவிடும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(ii) கித்துல் உற்பத்திக் கைத்தொழில் மூலம் அரசாங்கம் ஈட்டும் வருமானம் எவ்வளவென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-10-23
கேட்டவர்
கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.
அமைச்சு
பாரம்பரிய கைத்தொழில்கள், சிறு தொழில்முயற்சி அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks