பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4954/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

    1. 4954/ ’14

      கௌரவ நிரோஷன் பெரேரா,—  பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    புத்தளம் மாவட்டத்தின் வென்னப்புவ நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற புதிய பிரதான பஸ்தரிப்பு நிலையத்திற்காக மதிப்பிடப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவென்பதை  அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி பஸ்தரிப்பு நிலையத்தின் நிர்மாணிப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள கம்பனி யாது;

      (ii) அக்கம்பனியால் மேற்படி நிர்மாணிப்புக்காக பிறிதோர் நிறுவனத்திற்கு உப ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதா;

      (iii) ஆமெனில், அந்த உப ஒப்பந்தம் வழங்கப்படுகையில் முறைசார்ந்த கேள்விப்பத்திர நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா;

      (iv) அவ்விதமாக உப ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிறுவன உரிமையாளரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் யாவை

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) (i) மேலே குறிப்பிடப்பட்ட பஸ்தரிப்பு நிலையத்தின் நிர்மாணிப்பினை மேற்பார்வை செய்கின்ற நிறுவனம் யாது;

      (ii) மேற்படி நிர்மாணிப்புகளை நிறைவுசெய்ய எடுக்கும் காலம் யாது;

      (iii) நிர்மாணிப்பு நிறைவடைந்த பின்னர் மேற்படி பஸ்தரிப்பு நிலையத்தில் தரித்துவைக்கக்கூடிய பஸ்வண்டிகளின் எண்ணிக்கை யாது

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-08-08

கேட்டவர்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks