பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4955/ ’14
கெளரவ நிரோஷன் பெரேரா,— நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வென்னப்புவ நகரத்திலிருந்து கிரிமெட்டியான வரையில் செல்லுகின்ற “அலுத் மாவத்த” எனும் வீதியில் ஹெமில்டன் கால்வாய்க்குக் குறுக்காக நிர்மாணிக்கப்படும் பாலத்தின் மொத்தச் செலவு எவ்வளவு என்பதையும்;
(ii) இப்பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயர் யாது என்பதையும்;
(iii) இந் நிறுவனத்தினால் குறிப்பிட்ட நிர்மாணப் பணிகளுக்கு வேறு நிறுவனமொன்றுக்கு உப ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், இந்த உப ஒப்பந்தம் வழங்கல் முறைசார்ந்த கேள்விப்பத்திர நடைமுறையின் படி மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) மேலே குறிப்பிடப்பட்ட பாலத்தின் நிர்மாணப் பணிகளை மேற்பார்வை செய்யும் நிறுவனம் யாது என்பதையும்;
(vi) இந் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலம் எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேலே அ (i) இல் குறிப்பிட்டுள்ள பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவுறும் வரை போக்குவரத்துக்காக தற்காலிக பாலமொன்று அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) இன்றேல், வென்னப்புவ தொடக்கம் கிரிமெட்டியான வரையுள்ள மாற்றுப் பாதையூடாக பயணிக்கும் போது மொத்தமாகப் பயணிக்க வேண்டிய தூரம் எத்தனை கிலோமீற்றர் என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-08-19
கேட்டவர்
கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.
அமைச்சு
நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks