பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4956/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

    1. 4956/ ’14

      கெளரவ நிரோஷன் பெரேரா,— நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     புத்தளம் மாவட்டத்தில் பத்துலு ஓய—உடப்பு வீதியை நிர்மாணிப்பதற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ள பணத்தொகை யாது என்பதையும்;

                 (ii)    இவ்வீதியின் நிர்மாணப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிறுவனம் யாது என்பதையும்;

      (iii) இக் கம்பனிக்கு நிர்மாணப் பணிகளை ஒப்படைக்கும் போது முறைசார்ந்த கேள்விப்பத்திர நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டதா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்குறிப்பிட்ட வீதியின் நிர்மாணப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டதால் மக்கள் கடும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர் என்பதையும்;

      (ii) இவ்வீதியின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி யாது என்பதையும்;

      (iii) மேற்குறிப்பிட்ட வீதியின் நிர்மாணப் பணிகள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருப்பதால் போக்குவரத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-08-20

கேட்டவர்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks