E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4957/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

    1. 4957/ ’14

      கெளரவ நிரோஷன் பெரேரா,— கைத்தொழில், வாணிப அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      புத்தளம் பிரதேசத்தில் தற்போது செயற்படும் பதிவு செய்யப்பட்ட உப்பளங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

                 (ii)     இந்த உப்பளங்களின் மூலம் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படும் உப்பின் அளவு எத்தனை மெட்ரிக் தொன் என்பதையும்;

      (iii) புத்தளம் பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பு, தேசிய உப்புத் தேவையில் எத்தனை சதவீதத்தைப் பூர்த்தி செய்கின்றது என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) உப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கு அரச காணிகள் ஏதேனுமொரு அரச கொள்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், இக்காணிகள் வழங்கப்பட்டுள்ள கம்பனிகள், ஒவ்வொரு கம்பனிக்கும் வழங்கப்பட்டுள்ள காணியின் பரப்பளவு மற்றும் இக்காணிகளுக்கான அரச விலை மதிப்பீட்டுப் பெறுமதிகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (iii) அரச காணிகள் உப்பு உற்பத்திக்காக வழங்கப்படுகையில் ஒரு சில கம்பனிகளுக்கு விசேட சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-08-21

கேட்டவர்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

அமைச்சு

கைத்தொழில், வாணிப

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks