பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4961/ ’14
கௌரவ நிரோஷன் பெரேரா,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி குடாநாட்டுக்கு அண்மையில் அமைந்துள்ள 14 தீவுகளை சுற்றுலாத்துறைக்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுள்ளதென்பதையும்;
(ii) சுற்றுலாத்துறைக்காக பயன்படுத்தப்படும் மேற்படி தீவுகளை அண்மித்த பிரதேசங்களில் வாழ்கின்ற மீனவ மக்கள் தமது பூமியின் உரிமையை இழந்துள்ளமையினால் மிகக் கவலைக்குரிய நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) சுற்றுலாத்துறைக்காக தீவுகள் பயன்படுத்துவதால் தமது வாழ்விடங்க ளைஇழக்கின்ற மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(ii) தமது பூமியை இழக்கின்ற பாரம்பரிய மீனவ மக்களுக்கு போதியளவு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) சுற்றுலாத்துறைக்காக மேலே குறிப்பிடப்பட்ட 14 தீவுகளும் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களின் அல்லது கம்பனிகளின் பெயர்கள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி நிறுவனங்களுக்கு அல்லது கம்பனிகளுக்கு எந்த அடிப்படையில் இத்தீவுகள் வழங்கப்பட்டன என்பதையும்;
(iii) மேலே (இ) (i) ல் குறிப்பிட்டுள்ள கம்பனிகளுக்கு அந்த ஒவ்வொரு தீவும் வழங்கப்பட்டுள்ள விலைகள் தனித்தனியாக எவ்வளவென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-09-25
கேட்டவர்
கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks