பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
5030/ ’14
கௌரவ அகில விராஜ் காரியவசம்,— சிறு ஏற்றுமதிப் பயிர்கள் ஊக்குவிப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் உள்ள வெற்றிலை பயிர்ச் செய்கையாளர்களின் எண்ணிக்கை அண்ணளவாக யாது;
(ii) அதிகளவில் வெற்றிலை பயிரிடப்படும் பிரதேசங்கள் யாவை;
(iii) வெற்றிலை ஏற்றுமதி செய்யப்படும் பிரதானமான நாடுகள் யாவை;
(iv) வெற்றிலை ஏற்றுமதியின் மூலம் வருடாந்தம் ஈட்டப்படும் வெளிநாட்டுச் செலாவணியின் அளவு யாது;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) வெற்றிலைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு மானிய முறையின் கீழ் உரம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;
(ii) உள்நாட்டுச் சந்தையில், மிகக் குறுகியதொரு காலப் பகுதியினுள் நடைபெறுகின்ற வெற்றிலையின் விலைத் தளம்பலை குறைப்பதற்கு உகந்ததொரு முறையியலை அறிமுகப்படுத்துவது தொடா்பில் ஆராயப்பட்டுள்ளதா;
(iii) வெற்றிலைப் பயிர்ச்செய்கை தொடா்பில் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா;
(iv) ஆமெனில், மேற்படி ஆராய்ச்சிகளின் ஊடாக வெற்றிலைப் பயிர்ச்செய்கையின் நன்மைக்காக அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கியமான கண்டுபிடிப்புக்கள் அல்லது விதப்புரைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-09-11
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
சிறு ஏற்றுமதி பயிர்கள் ஊக்குவிப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks