பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

5032/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

    1. 5032/ ’14

      கௌரவ அகில விராஜ் காரியவசம்,— கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      இலங்கையில் தற்சமயம் காணப்படும் எருமை மாடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

                 (ii)     அதிகளவு எருமை மாடுகள் காணப்படும் ஐந்து மாவட்டங்களும் ஒழங்கு வரிசைப்படி யாவை என்பதையும்;

      (iii) அரசாங்க பண்ணைகளில் வளர்க்கப்படும் எருமை மாடுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (iv) இலங்கையில் வளர்க்கப்படும் எருமை மாடு வகைகளின் (breeds) பெயர்கள் யாவை என்பதையும்;

      (v) வருடாந்தம் உற்பத்தி செய்யப்படும் தயிர் லீற்றர்கள் எவ்வளவென்பதையும்;

      (vi) எருமை மாடுகளின் பாலும், பசு மாடுகளின் பாலும் போசாக்கின் அடிப்படையில் ஒன்றுக்கு ஒன்று வேறுபடுகின்றதா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) உள்நாட்டு பால் உற்பத்தியின் பொருட்டு எருமை மாடுகளை வினைத்திறன்மிக்க விதத்தில் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனின், மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை என்பதையும்;

      (iii) எருமை மாடுகள் பற்றிய கருத்திட்டத்திற்கென 2013 ஆம் ஆண்டில் செலவிடப்பட்டுள்ள பணத் தொகை  எவ்வளவென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-09-25

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks