E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

5033/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

    1. 5033/ ’14

      கௌரவ அகில விராஜ் காரியவசம்,—  சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      இலங்கையில் தனியார் மருத்துவ ஆய்வு கூடங்களை பேணிவருவதற்காக சுகாதார அமைச்சின் அனுமதியையும் பதிவு செய்தலையும் பெறுதல் அவசியமாகுமா என்பதையும்;

      (ii) ஆமெனின், தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள தனியார் மருத்துவ ஆய்வு கூடங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) சுகாதார அமைச்சின் அலுவலர்களால் தனியார் மருத்துவ ஆய்வு கூடங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றனவா என்பதையும்;

      (ii) மேற்படி நிறுவனங்களின் ஊடாக நோயாளர்கள் துல்லியமான மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை உறுதிபடுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iii) துல்லியமான மருத்துவ அறிக்கைகளை பெற்றுக்கொடுக்க தவறும் நிறுவனங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iv) மருத்துவ அறிக்கைகளை வழங்குகின்றபோது முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் தொடர்பில் பொது மக்கள் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கக்கூடிய நிறுவனமொன்று இருக்கின்றதா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-09-26

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-10-30

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks