E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0031/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 31/'15

       

      கௌரவ புத்திக பத்திறண,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இன்றளவில் வெளிநாடுகளில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) இவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நாடுகள் மற்றும் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள மீனவர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) சிறைபிடிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மீனவரினதும் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் சிறையிலுள்ள காலப்பகுதி யாதென்பதை வெவ்வேறாக அவர் சபைக்கு சமர்ப்பிப்பாரா?

      (இ) (i) சிறைபிடிக்கப்படுகின்ற மீனவர்களை துரிதமாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாதது ஏனென்பதையும்;

      (ii) மீனவர்கள் கடல் எல்லைகளை மீறுவதைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      (iii) சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விடுதலை பெற்ற பின்னர் அவர்களது தொழிலை மீள ஆரம்பிப்பதற்கு உதவி வழங்கப்படுகின்றதா என்பதையும்;

      (iv) ஆமெனில், அது எவ்வாறென்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-23

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-11-21

பதில் அளித்தார்

கௌரவ திலிப் வெதஆரச்சி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks