E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0039/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 39/ '15

      கௌரவ புத்திக பத்திறண,— வௌிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2010 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை (மேற்படி இரண்டு ஆண்டுகளையும் உள்ளிட்டதாக) 5 ஆண்டுகளினுள் மத்தியகிழக்கு நாடுகளில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு இலக்காகிய இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தனித்தனியாக எவ்வளவு;

      (ii) அப்பெண்கள் பணியாற்றிய மத்தியகிழக்கு நாடுகள் யாவை;

      (iii) மேற்படி பெண்களுக்காக அந்நாடுகளில் இலங்கைத் தூதரகங்கள் ஊடாக மேற்கொண்ட நடவடிக்கைகள் ஒவ்வொரு பெண் தொடர்பிலும் தனித்தனியாக யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி பாலியல் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;

      (ii) ஆமெனில், அத்தகைய ஒவ்வொரு ஆளுக்கும் எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் தனித்தனியாக யாவை;

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) வௌிநாடுகளுக்கு செல்கின்ற இலங்கைப் பெண்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;

      (ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை;

      (iii) இலங்கைப் பெண்கள் வீட்டுப் பணிகளுக்காக வௌிநாடு செல்வதை மட்டுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-03

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-12-07

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks