E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0056/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 56/ '15

       

      கௌரவ புத்திக பத்திறண,— கிராமியப் பொருளாதார விவகாரங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தம்புல்ல விசேட பொருளாதார நிலையத்திற்கு கொண்டுவரப்படுகின்ற மரக்கறிகளுக்காக நியாயமான விலை கிடைப்பதில்லை என்பதையும்;

      (ii) கப்பம் வாங்குபவர்களும் இடைத்தரகர்களும் விவசாயிகளுக்கு மோசடிகள் புரிகின்றனரென்பதையும்;

      (iii) அரசியல் பாதுகாப்பின் பேரில் கப்பம் வாங்குபவர்கள் இயங்கிவருகின்றனர் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி பொருளாதார நிலையத்தில் விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா;

      (ii) ஆமெனில், அவ்வேலைத்திட்டம் யாது;

      (iii) நிலையத்தில் இயங்கிவருகின்ற கப்பம் வாங்குபவர்களை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா;

      (iv) ஆமெனில், அது எவ்விதத்தில்;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) (i) இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்டமைக்கான நோக்கங்களும் இலக்குகளும் யாவை;

      (ii) இன்றளவில் அந்நோக்கங்களும் இலக்குகளும் வென்றெடுக்கப்பட்டுள்ளனவா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) (i) மேற்படி நிலையத்தில் உள்ள கடை அறைகளின் எண்ணிக்கை யாது;

      (ii) அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களும் முகவரிகளும் யாவை;

      (iii) மேற்படி உரிமையாளர்களிடமிருந்து அரசாங்கம் அறவிடுகின்ற வரித்தொகை எவ்வளவு;

      (iv) இந்த கடை அறைகள் கீழ்வாடகைக்கு விடப்பட்டுள்ளனவென்பதை அறிவாரா;

      (v) ஆமெனில், அது சட்டவிரோதமானதென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;

      (vi) விவசாயிகள் அமைப்புக்களுக்கும் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்திற்கும் வழங்கப்பட்டிருந்த கடை அறைகள் இரண்டிலுமிருந்து அவர்கள் ஏன் அகற்றப்பட்டார்கள்;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-09

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-12-09

பதில் அளித்தார்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks