E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0069/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 69/ '15

      கெளரவ புத்திக பத்திறண,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இந்து சமுத்திரத்தின் சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு சீனப் படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அந்த அனுமதி வழங்கப்பட்ட படகுகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iii) மேற்படி படகுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான உடன்படிக்கை தொடர்பான நிபந்தனைகள் யாவை என்பதையும்;

      (iv) இவ்வாறு அனுமதி வழங்கப்படுவதன் மூலம் எதிர்பார்க்கப்படும் வருடாந்த வருமானம் எவ்வளவு என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) சர்வதேச கடலில் மீன் பிடிக்கும் இலங்கைப் படகுகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) சீனப் படகுகளின் காரணமாக இலங்கை மீனவர்களுக்கு ஏற்படுகின்ற அநீதியை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;

      (iii) சீனப் படகுகளுக்கு அனுமதி வழங்குவதற்குப் பதிலாக இலங்கையர்களுக்கு பாரிய மீன்பிடிப் படகுகளை பெற்றுக்கொள்வதற்கு உதவி வழங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (iv) இலங்கையர்களுக்கு சர்வதேச கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான பாரிய மீன்பிடிப் படகுகளையும் நவீன தொாழில்நுட்ப உபகரணங்களையும் தேவையான வசதிகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

      (v) ஆமெனில், அது எவ்வாறு என்பதையும்; எத்திகதியிலிருந்து என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-28

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-02-09

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks