E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0265/ 2010 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

    1. 0265/ ‘10

      கெளரவ றஊப் ஹக்கீம்,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      கடுகண்ணாவ, குருகுந்தல, 18 ஆம் இலக்க முகவரியில் வசிக்கும்             திரு. எஸ்.எம்.எம். ஹலீம் 1994, ஒற்றோபர் மாதம் 03 ஆம் திகதியிலிருந்து    க/ அல்-மனார், மாவனெல்ல சாஹிரா மற்றும் மாவனெல்ல மயுரபாத ஆகிய தேசிய பாடசாலைகளில் (கஷ்டப் பிரதேச, கஷ்டப் பிரதேசமல்லாத) திருப்திகரமாக கடமையாற்றிய ஒரு வணிகப் பட்டதாரி ஆசிரியர் என்பதையும்,

      (ii) திரு. ஹலீம் தற்போது கடயைமையாற்றும் மாவனெல்ல சாஹிரா தேசிய பாடசாலையில் கடமைக்கு சமுகமளிப்பதற்கு, அதே பாடசாலை அதிபர் தடையேற்படுத்துகிறாரென்பதையும்,

      (iii) மேற்படி அதிபர், வெளி நபர்களை ஈடுபடுத்தி பாடசாலை வளவினுள்       திரு. ஹலீமைத் தாக்கி உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதால், அந்தப் பாடசாலையில் இவருக்கு சுதந்திரமாக பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதென்பதையும்,

      (iv) இதனால், இவர் மாவனெல்ல மயுரபாத தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் ஒன்றைக் கோரியுள்ளாரென்பதையும்,

      (v) அந்தக் கோரிக்கையை வேண்டுமென்றே சிபாரிசு செய்யாமல் மேற்படி அதிபர் தொடர்ந்தும் திரு. ஹலீமை  உளரீதியாக பாதிப்படையச் செய்கிறாரென்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) குறித்த அதிபரின் நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சு மட்டத்தில் விசாரணையொன்று நடத்தப்படுமாவென்பதையும்,

      (ii) திரு. ஹலீமுக்கு, மாவெனல்ல மயுரபாத தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்க தாமதமின்றி நடடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், என்?

கேட்கப்பட்ட திகதி

2010-09-08

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks