E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0121/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. கௌரவ புத்திக பத்திறண,— சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2015 ஆம் ஆண்டளவில் இலங்கையில் காணப்படும் சுற்றுலாச் சபையினால் அங்கிகரிக்கப்பட்ட ஹோட்டல்களின் எண்ணிக்கை யாது:

      (ii) ஒவ்வொரு ஹோட்டலிலும் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;

      என்பதை அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

      (ஆ) (i) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடத்திலும் வெவ்வேறாக யாது;

      (ii) மேற்படி இரண்டு ஆண்டுகளினுள்ளும் இலங்கைக்கு அதிக எண்ணிக்கையான சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ள 10 நாடுகள் யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) சுற்றுலாத் துறையை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

      (ii) சுற்றுலாத் துறையை விஸ்தரிக்கின்றபோது இந்நாட்டின் சுற்றாடலுக்கும் கலாசாரத்துக்கும் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்வதற்கான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டமொன்று காணப்படுகின்றதா;

      (iii) ஆமெனில், குறித்த வேலைத்திட்டம் யாது;

      (iv) இன்றேல், சுற்றாடல் மற்றும் கலாசாரத்தை பாதுகாப்பதற்கான திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்துவாரா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-22

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-22

பதில் அளித்தார்

கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks