E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0157/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. கௌரவ புத்திக பத்திறண,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான வனாந்தரக் காணிகளின் பரப்பளவு எவ்வளவு;

      (ii) இவ்வனாந்தரங்களின் பெயர்கள் யாவை;

      (iii) ஒவ்வொரு வனாந்தரத்தினதும் பரப்பளவு ஏக்கர்களில் வெவ்வேறாக எவ்வளவு;

      என்பதை அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

      (ஆ) (i) குறிப்பிட்ட வனாந்தரங்களின் எல்லைகள் அடையாளமிடப்பட்டுள்ளனவா;

      (ii) ஆமெனில், இவ்வெல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்ட திகதி யாது;

      (iii) இன்றேல், எல்லைகளை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;

      (iv) ஆமெனில், அத்திகதி யாது;

      என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) (i) மேலே அ (ii) இல் குறிப்பிடப்பட்ட வனாந்தரங்களினுள் தற்போது வீடுகள், சுற்றுலாக் கைத்தொழிலுடன் தொடர்புடைய ஹோட்டல்கள் அல்லது வேறு நிர்மாணிப்புகள் உள்ளனவா;

      (ii) ஆமெனில், மேற்படி நிர்மாணிப்புகள் காரணமாக வனாந்தரத்துக்கு ஏற்படும் தாக்கங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளதா;

      என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-10

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2018-03-08

பதில் அளித்தார்

கௌரவ அநுராத ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks