E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0165/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.

    1. 165/ '15

      கௌரவ லக்கி ஜயவர்தன,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 1977 முதல் நீண்ட காலமாக உடுநுவர தேர்தல் தொகுதி முழுவதுமாக யட்டிநுவர டிப்போவினால் முறைசார்ந்ததொரு பேரூந்து சேவை உடுநுவர பயணிகளின் வசதி கருதி ஈடுபடுத்தப்பட்டிருந்தது என்பதையும்;

      (ii) பிரதேச மட்டத்தில் டிப்போக்களை பேணிவந்து பிரதேசத்திலுள்ள பயணிகளுக்கு வசதி செய்து கொடுத்தல் இலங்கை போக்குவரத்துச் சபையின் நோக்கமாக இருந்ததென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி அ(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள காலத்தினுள் பேரூந்துகள் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட வீதிகள் மற்றும் வீதி இலக்கங்கள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி வீதிகளில் யட்டிநுவர டிப்போவினால் தற்போது பேரூந்துகள் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படாத வீதிகள் யாவை என்பதையும்;

      (iii) தற்போது பேரூந்துகள் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படுகின்ற வீதிகள், வீதி இலக்கங்கள் மற்றும் நேரங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) தற்போது யட்டிநுவர டிப்போவினால் ஓட்டத்தில் ஈடுபடுத்துதல் நிறுத்தப் பட்டுள்ளதும், முன்னர் பேரூந்துகள் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டதுமான வீதிகளில் மீண்டும் பேரூந்துகளை ஓட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், அது எத்திகதியிலிருந்து என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-21

கேட்டவர்

கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-11-21

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks