பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
173/ '15
கௌரவ டலஸ் அழகப்பெரும,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உள்ளூராட்சி திணைக்களத்தினால் 2014 ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்ட "கமென் கமட – தொரென் தொரட்ட" (கிராமம் கிராமமாக – வீடு வீடாக) கருத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளின் மூலம் மாத்தறை மாநகர சபை ஆளுகைப் பிரதேசத்தில், பரமுல்ல, பெஹெத் கபடாவ வீதி, மதகினை அபிவிருத்தி செய்வதற்கு மாத்தறை மாநகர சபை மாத்தறை வல்கம வடக்கு, கொட்டிகாகொட ரஜமகா விஹாரை வீதி, 112/3 இலக்கத்தில் அமைந்துள்ள எக்கமுத்து விவசாய அமைப்புடன் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளதென்பதையும்;
(ii) கோப்பு இலக்கம் ම.ම.න.ස/නා.ඉ.දෙ/WC-3/2014-දො.දො-04 உடன்படிக்கையின் பிரகாரம், 2014 நவெம்பர் 17 ஆம் திகதி இவ்விடயத்தின் நிர்மாணிப்புகள் ஆரம்பிக்கப்பட்டு 2014 திசெம்பர் மாதம் இப்பணிகள் பூர்த்திசெய்யப் பட்டிருந்தும், இற்றைவரை சம்பந்தப்பட்ட ஒப்பந்தப் பணத்தொகை விவசாய அமைப்பிற்கு செலுத்தப்படவில்லையென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) சம்பந்தப்பட்ட நிர்மாணிப்புகள் பூர்த்தியாக்கப்பட்டு கொடுப்பனவுக்கான கட்டணப் பட்டியல்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேற்படி ஒப்பந்தத்துக்கு ஏற்புடையதான பணத்தொகை வல்கம வடக்கு எக்கமுத்து விவாசாய அமைப்பிற்கு விடுவிக்கப்படும் தேதி யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-27
கேட்டவர்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2015-11-27
பதில் அளித்தார்
கௌரவ கருணாரத்ன பரணவிதான, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks