E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0200/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

    1. 200/ '15

      கௌரவ அநுர திஸாநாயக்க,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) சோ் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் போதிக்கப்படும் கற்கை நெறிகள் யாவை என்பதையும்;

      (ii) அவ்வாறான ஒவ்வொரு கற்கை நெறியையும் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கல்வியாண்டின் படி தனித்தனியாக யாவையென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் பயிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கல்வியாண்டின்படி தனித்தனியாக யாவையென்பதையும்;

      (ii) மருத்துவ பீடத்திற்கு வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான பிரமாணங்கள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படி வெளிநாட்டு மாணவர்களின் பெயர்கள், இவர்கள் எந்த நாட்டின் பிரஜைகள், பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமைகள் மற்றும் அவர்களிடமிருந்து அறவிட்ட தொகை கல்வியாண்டின்படி தனித்தனியாக யாதென்பதையும்;

      அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

      (இ) (i) மேற்படி பல்கலைக்கழகத்தில் தாதியர் கற்கை நெறியில் பயிலும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) இவர்களின் பெயர்கள், உயர் தர பாடத்துறை, உயர் தரப் பெறுபேறு மற்றும் 'Z' பெறுமானம் தனித்தனியாக யாதென்பதையும்;

      அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-02

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-12-02

பதில் அளித்தார்

கௌரவ ருவன் விஜேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks