E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0201/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

    1. 201/ '15

      ​கௌரவ அநுர திசாநாயக்க,— தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவரினதும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களினதும் பெயர்கள் யாவை என்பதையும்;

      (ii) இவர்களுடைய கல்வித் தகைமைகள் யாவை என்பதையும்;

      (iii) தற்போதைய ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் இதற்கு முன்னர் அரச நிறுவனங்களில் அல்லது தனியார் நிறுவனங்களில் வகித்த பதவிகள் யாவை என்பதையும்;

      (iv) சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் மற்றும் விளம்பரப்படுத்தல் தொடர்பாக இவர் கொண்டுள்ள அனுபவங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) ஸ்ரீ லங்கா ரெலிகொம் தலைவர் பதவிக்கான சம்பளத்தை அதிகரிப்பதற்கு கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் பணிப்பாளர் சபையினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அது எத் திகதியில்; எந்த அளவில் என்பதையும்;

      (iii) தற்போதைய ஸ்ரீ லங்கா ரெலிகொம் தலைவரின் அடிப்படைச் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய வசதிகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (iv) இவருடைய மொத்தச் சம்பளம் எவ்வளவென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-03

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-12-03

பதில் அளித்தார்

கௌரவ ஹரின் பிரனாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks