பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
203/'15
கௌரவ டலஸ் அழகப்பெரும,— பொது நிர்வாக, முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பட்டதாரி பயிலுனர்களுக்கு, அபிவிருத்தி சேவைப் பிரமாணங்களுக்கமைய நிரந்தர நியமனங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு 12/0030/523001 ஆம் இலக்க 2013.01.10 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின் படி அங்கீகாரம் கிடைத்துள்ளதென்பதையும்;
(ii) இவ்வாறு தென் மாகாண சபை நிரந்தர அரச சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களின் நியமனத் திகதியாக, ஒராண்டு பயிற்சிக் காலம் நிறைவடைந்த திகதி அல்லது இத்திகதி அரசாங்க விடுமுறை தினமாகுமெனில், இதன் பின்னர் வருகின்ற முதலாவது கடமை நாள் கருதப்படல் வேண்டுமென, இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் தமது 2014.11.18 ஆம் திகதிய CS/DOS/21 ஆம் இலக்க கடிதம் மூலம் தென் மாகாண பிரதம செயலாளருக்கு அறிவித்துள்ளார் என்பதையும்;
(iii) தென் மாகாண பிரதம செயலாளரின் CSS/2/13/GRAD/1-V ஆம் இலக்க 2014.08.12 ஆம் திகதிய தீர்மானத்தின் படி, G/SP/12/08 ஆம் இலக்க 2014.11.18 ஆம் திகதிய ஆளுநரின் தீா்மானத்தின் மூலம், மாத்தறை மாவட்டத்திற்கு ஆட்சேர்க்கப்பட்ட 313 பட்டதாரி பயிலுனர்கள் ஒராண்டு பயிற்சிக் காலத்தின் பின்னர் நிரந்தர நியமனத்திற்கான உரிமையைப் பெற்றுள்ளார்கள் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) தென் மாகாண நிரந்தர அரச சேவைக்கு பட்டதாரி பயிலுனர்களை உள்ளீர்த்து, அவர்களுக்குரிய நிலுவைச் சம்பளம் மற்றும் சேவைக் காலத்தை பெற்றுக்கொடுக்கும் திகதி யாதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-12-04
கேட்டவர்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2015-12-04
பதில் அளித்தார்
கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks