E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0249/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

    1. 249/'15

      கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) 2015.10.15 ஆம் திகதி பிற்பகல் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவிய வேளையில், கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் பாதுகாப்பற்ற வடிகாலில் வீழ்ந்ததால் க/பதியுதீன் மஹமூத் மகளிர் வித்தியாலயத்தில் உயர் தர வகுப்பில் கல்வி கற்ற மாணவி பாத்திமா அஸ்ரா மரணமடைந்ததை அவர் அறிவாரா?

      (ஆ) எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் மரணமடைந்த மேற்படி மாணவியின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள இவரது பெற்றோருக்கு இழப்பீட்டுத் தொகையொன்றை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-09

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-02-09

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks