E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0258/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

    1. 258/ '15

      கௌரவ ஜயந்த சமரவீர,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) 2015 சனாதிபதித் தேர்தலின்போது சனாதிபதி வேட்பாளரான, தற்போதைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் முன்வைக்கப்பட்ட "மைத்திரி ஆட்சியும் நூறு நாட்களில் புதியதொரு நாடும்" என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் 35 ஆம் இலக்கத்தின் கீழ், கடன் தகவல் பிரிவின் (CRIB) கறைநிரல் பட்டியலில் உள்ளடங்கி கடன் பொறியில் சிக்குண்டிருந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களையும் கடன் அட்டை உரிமையாளர்களையும் அதிலிருந்து மீட்டு தளர்த்தபட்ட நிபந்தனைகளுடன் கடனைச் செலுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்படுமென வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது என்பதை அவர் அறிவாரா?

      (ஆ) 2015.11.01 ஆம் திகதியாகும்போது மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சலுகை வழங்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர் களினதும் கடன் அட்டை உரிமையாளர்களினதும் எண்ணிக்கை ஒவ்வொரு வங்கியின் பிரகாரம் தனித்தனியாக எத்தனையென்பதை அவர் இச்சபைக்குச் சர்ப்பிப்பாரா?

      (இ) மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் தளர்த்தப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் கடனை செலுத்துவதற்கான வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களினதும் கடன் அட்டை உரிமையாளர்களினதும் பெயர், முகவரி மற்றும் பெறப்பட்ட கடன் தொகை பற்றிய விபரமானதோர் அறிக்கையை சபையில் சமர்ப்பிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-01-26

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-01-26

பதில் அளித்தார்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks