E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0284/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

    1. 284/ '15

      கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— புத்த சாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்று அமைச்சிடம் உள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அந்த வேலைத்திட்டம் யாதென்பதையும்;

      (iii) விகாரைகளுக்கு நிதி ஒதுக்குகின்ற முறையியல் யாதென்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) இலங்கையில் இருக்கின்ற அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) அறநெறிப் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு எவ்வளவென்பதையும்;

      (iii) அப்பணத் தொகை போதுமானதா என்பதையும்;

      (iv) அவ்வாறின்றேல், அப்பணத்தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (v) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-09

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

புத்தசாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-02-09

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks