பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
312/ ’15
கௌரவ ஜே. எம். ஆனந்த குமாரசிறி,— புத்தசாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள ருஹுணு மகா கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான காணிகளின் பரப்பளவு எவ்வளவென்பதையும்;
(ii) மேலே குறிப்பிடப்பட்ட காணியிலிருந்து நபர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணியின் ஏக்கர் அளவு எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி காணிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) ஆலயத்திற்கு சொந்தமான காணிகள் பெருமளவில் வர்த்தகர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுவதால் சேனைப் பயிர்ச் செய்கையின் மூலம் வாழ்க்கையை கொண்டுநடாத்துகின்ற விவசாயிகளுக்கு விவசாயத்தில் ஈடுபடுவதற்குள்ள உரிமை இழக்கப்படுமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) மேற்படி விவசாயிகளுக்கு பயிரிடுவதற்கான காணிகளை பெற்றுக்கொடுக்கும் முறையியலொன்றை தயாரிப்பாரா என்பதையும்;
(iii) எதிர்காலத்தில் மொனராகலை மாவட்டத்தில் உருவாகக்கூடிய தீவிர காணிப் பிரச்சினையை கருத்திற்கொண்டு தொடர்ந்தும் பெருமளவில் வர்த்தகர்களுக்கு காணிகள் பெற்றுக்கொடுக்கப்படுவதை இடைநிறுத்துவாரா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-01-28
கேட்டவர்
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பா.உ.
அமைச்சு
புத்தசாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks