பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
315/ '15
கௌரவ விமலவீர திசாநாயக்க,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அம்பாறை நகர சபை ஆளுகைப் பிரதேசத்தில் நவகம்புர கிராமத்தில் 25 வீடுகளை நிர்மாணிப்பதெற்கென தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 25 காணித்துண்டுகள் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) மேற்படி காணிகளை பகிர்ந்தளிக்கும் போது 2008/4 ஆம் இலக்க சுற்றறிக்கையோ அல்லது வசிப்பதற்கு காணிகளை பெற்றுக் கொடுக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வேறு கட்டளைச் சட்டங்களோ அல்லது முறைசார்ந்த செயல்நடைமுறைகளோ பின்பற்றப்படவில்லை என்பதையும்;
(iii) மேற்படி காணிகள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பகிர்ந்தளிக்கப்பட்ட போதிலும், அதற்கு அம்பாறை பிரதேச செயலாளரிடமிருந்து முறைசார்ந்த அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்பதையும்;
(iv) பகிர்ந்தளிக்கப்பட்ட காணிப் பயனாளிகளின் பெயர்ப்பட்டியல்களைத் தயார் செய்யும் போது அல்லது சிபாரிசு செய்யும் போது இடம்பெற்றுள்ள அநீதியான நடவடிக்கைகள் காரணமாக, நவகம்புர கிராம வீதியிலும் மற்றும் அம்பாறை நகரத்திலும் வசிப்பதற்கு காணித் துண்டொன்று இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி (அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள சகல விடயங்கள் தொடர்பிலும் முறைசார்ந்த விசாரணையொன்றை மேற்கொள்வாரா என்பதையும்;
(ii) மேற்படி காணி பகிர்ந்தளிப்பிலுள்ள அநீதியான வேலைத்திட்டம் காரணமாக அம்பாறை நகர சபை ஆளுகைப் பிரதேசத்தின் அ(iv) இல் குறிப்பிடப்பட்டுள்ள காணிகளை இழந்துள்ள மக்களுக்கு நேர்ந்துள்ள பாதிப்பைச் சீர் செய்வாரா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-01-27
கேட்டவர்
கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-06-27
பதில் அளித்தார்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks