பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
325/ '15
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையினுள் வாகனங்களுக்கு புகைப் பரிசோதனைச் சான்றிதழ்களை வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கை யாது;
(ii) புகைப் பரிசோதனைச் சான்றிதழ்களை வழங்குவதற்கான அதிகாரம் பெற்ற நிறுவனங்கள் யாவை;
(iii) மேற்படி நிறுவனங்கள் புகைப் பரிசோதனைச் சான்றிதழ்களை எந்த ஆண்டிலிருந்து வழங்குகின்றன;
(iv) புகைப் பரிசோதனைச் சான்றிதழ்களை வழங்கத் தொடங்கிய வருடம் முதல் ஒவ்வொரு நிறுவனமும் உழைத்த வருமானம் வருடாந்த அடிப்படையில் வெவ்வேறாக யாது;
(v) ஒவ்வொரு வாகனத் தொகுதிக்கும் ஏற்ப புகைப் பரிசோதனைச் சான்றிதழ்களை வழங்குகையில் அறவிடப்படும் கட்டணங்கள் யாவை;
(vi) மேற்படி நிறுவனங்கள் புகைப் பரிசோதனைச் சான்றிதழ்களுக்காக அரசாங்கத்துக்கு செலுத்தும் பணத்தொகை ஒவ்வொரு வாகனத் தொகுதிக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;
(vii) மேற்படி நிறுவனங்கள் புகைப் பரிசோதனைச் சான்றிதழ்களை வழங்குவதற்கு ஆரம்பித்த வருடம் முதல் அரசாங்கத்துக்கு செலுத்தியுள்ள பணத்தொகை ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;
(viii) மேற்படி நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு நிலுவைப் பணத் தொகைகளை செலுத்த வேண்டியுள்ளனவா;
(ix) ஆமெனில், குறித்த நிலுவைப் பணத்தொகை ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;
(x) மேற்படி நிறுவனங்களின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் மற்றும் அவர்களது விலாசங்கள் யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-26
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-02-26
பதில் அளித்தார்
கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks